
Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது.
டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் பாடல், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான Zee Music கம்பெனி உடன் இணைந்து கண்கவர் காட்சிகளாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான டாக்ஸிக் உலகத்தை முதன்முறையாக ரசிகர்கள் காணும் வாய்ப்பையும் இந்த மியூசிக் வீடியோ வழங்குகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடல், இருவரின் அற்புதமான கெமிஸ்ட்ரி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மறக்க முடியாத காதலை கொண்டாடுகிறது. அவர்களைச் சுற்றிய உலகமே மறைந்து போகும் அளவிற்கு, காதலின் தூய்மையான, ஆழமான, முழுமையான வடிவத்தை ‘தபாஹி’ வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்கவர் ஒளிப்பதிவு, உணர்வுகளைத் தூண்டும் கதை சொல்லல், மின்னல் வேக கிட்டார் இசை மற்றும் உயர்தர ஆர்கெஸ்ட்ரா இசை அமைப்பு ஆகியவற்றுடன், டாக்ஸிக் திரைப்படத்தின் மர்மமான மற்றும் தனித்துவமான உலகிற்கான சிறப்பான அறிமுகமாக இந்த மியூசிக் வீடியோ அமைந்துள்ளது.