தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
இவர் தனது வாழ்நாள் முழுவதும் சுய ஒழுக்கத்தடன் தன் நலம் கருதாமல் நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக ஏற்கனவே சிலர் குறும்படமாக வெளியிட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் ஜே.எம்.பஷீர் என்பவர் தேவர் வேடத்தில் நடிப்பதாக விளம்பரங்கள் வெளியிட்டு படப்பிடிப்பு பணிகளும் துவங்கியதாக செய்திகளும் வந்தது.
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் நடிப்பவர்கள் சிறிதளவாவது சுய ஒளுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தேவர் தேர்தலில் போட்டியிட்ட போது காசு கொடுத்து ஓட்டு வாங்குவதும்,ஓட்டு போடுவதும் மாபெரும் குற்றம் என்று பேசியவர். அவரது கெட்டப்பை போட்டுக் கொண்டு நேற்று திருவல்லிக்கேணி பகுதியில் பஷீர் அதிமுக சார்பில் அப்பகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பஷீர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
இதுகுறித்து தேவர் சமூக நிர்வாகிகள் கூறுகையில், வழக்கு இவருக்கு ஒன்றும் புதிதல்ல. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவர் முகமூடியை அனிந்து கொண்டு முறைகேடு செய்தால் அது தேவரை அவமானப்படுத்தும் செயலாகவே பார்க்கப் படுகிறது.ஏற்கனவே அதிமுக அரசு இட ஒதுக்கீடு பிரச்சினையில் எங்கள் சமூகத்திற்கு துரோகம் செய்துள்ளது.
பஷீர் தேவர் வேடத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்டாமல் இருந்தால் அவருக்கு நல்லது. தேவர் முகமூடியை அனிந்து இருக்கும் போதாவது தேவரின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சினிமாக்காரர்கள் அரசியலில் ஈடுபடலாம், ஆனால் சினிமாவுக்குள் அரசியல் வராமல் இருந்தால் சினிமாத்துறைக்கு நல்லது.