செல்வமணியின் ஜோசியம் பலிக்குமா…?…

திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவரும் இது திமுகவின் ஆட்சியாக இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சு அனைவரைம் கவர்ந்தது. இப்போது இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி முதல்வர் ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் தொலைக்காட்சி உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் வெளியானது. இதைப் பார்த்ததும் இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கும் அதிமுகவின் பிரச்சார பீரங்கிகளான இயக்குனர் ஆர். வி . உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கைதட்டி சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள் . இந்த நிகழ்வு சிலரை வருத்தமடைய செய்திருக்கிறது.

இதுகுறித்து விசாரித்த போது… சில தினங்களுக்கு முன் இயக்குனர்கள் சங்கத்தில் பெரும்பான்மை நிர்வாகிகளாக இருப்பவர்கள் அதிமுக அபிமானிகள் தான். இவர்கள் அனைவரும்…. ஏற்கனவே ஓ.பண்ணீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து கூறினார் பண்ணீர் செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். சசிகலாவை சந்தித்து வாழ்த்து கூறி செல்வமணி பேட்டி அளித்தார், உடனே சசிகலா சிறைக்குச் சென்றார். எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரும்பும் ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு சோதனைகள் வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இறுதியாக பழனிச்சாமியை சந்தித்து நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று கூறி ஜெயலலிதா பெயரில் கட்டிடம் கட்டுவதாக கூறி சில கோடிகளை பெற்று வந்தார். எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான். அவரைப்போல அவரது மனைவி நடிகை ரோஜாவும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று பேசி வீடியோ வெளியிட்டார் . இறுதியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தேர்தலில் படுதோல்வி அடைந்தது .செல்வமணி அவ்வளவு ராசியான நபர்.

ஆகையால் தற்போது இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க செல்வமணியை அனுப்பினால் சில தினங்களில் கண்டிப்பாக ஏதாவது சோதனை வரும், செல்வமணி ஸ்டாலினை சந்திக்க யாரை வைத்து ஏற்பாடு செய்யலாம் என்று யோசிக்கும் போது பி. ஆர். ஓ .விஜய்முரளி தான் இதற்கு சரிப்பட்டு வருவார் என்று அவரை தயார் படுத்தியிருக்கிறார்கள் .பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்பவராக வலம் வரும் விஜய்முரளி மூலமாகவே இந்த சதியை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

செல்வமணி, முதல்வர் சந்திப்பு புகைப்படம் வெளியானதும் இயக்குனர்கள் சங்கத்தின் அதிமுக நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சோதனை ஆரம்பித்து விட்டது என்று பேசி சந்தோஷப் பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாகவே இந்தியாவில் உள்ள அனைத்து ஜோதிடர்களின் கணிப்பை எல்லாம் தவிடுபொடி ஆக்கியவர் ஸ்டாலின். இந்த செல்வமணி ஜோசியம் எல்லாம் பலிக்காது என்று கூறுகிறார்கள் திமுக திரையுலக பிரபலங்கள்.

சூரியன்.

Exit mobile version