“சிதை” என்கிற பெயரில் வெளியான குறும்படம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த குறும்படத்தை இயக்கிய கார்த்திக் ராம் 380 விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிதை குறும்படம் தற்போது கார்த்திக் ராம் இயக்கத்தில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை அக்னி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தன்ராஜ் தயாரிக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறுகையில்…. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானல் அருகே உள்ள பெருங்காடு கிராமத்தில் முப்பது நாட்களில் முடித்துள்ளோம். அந்த ஊர் மக்கள் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பெயர் அறிவிப்பும், இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது என்றார்.