வடமாநில இளைஞனை மணந்த தமிழச்சியின் காதலைச் சொல்லும் “ரவாளி” படத்தின் இசை வெளியீட்டு விழா

சிவரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரவி ராகுல் இயக்கும் படம் “ரவாளி”. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கஸ்தூரி ராஜா, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, விஜய் முரளி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பேசுகையில்… தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் வடமாநில இளைஞனை காதலிக்கிறாள் தமிழ்ப்பெண். பின்னர் வீட்டிற்கு தெரியாமல் அவனை கல்யாணம் செய்து கொண்டதும் அவன் காணாமல் போகிறான். அதன்பிறகு அவனைத் தேடுவதில் கதை பயணிக்கிறது என்றார்.

கதாநாயகன் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாயகன் சித்தார்த்துக்கு நடிப்போடு தமிழையும் கற்றுக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரவி ராகுல். படத்தில் அவரையே டப்பிங் பேசவும் வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜெய பிரகாஷ், பூ விலங்கு மோகன், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இறுதியாக “ரவாளி” படத்தின் இசைத்தகடை இயக்குனர் கஸ்தூரி ராஜா வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

Exit mobile version