நடிகர் நானியின் நடிப்பில் “தசரா” படத்தின் முதல் சிங்கிள் விரைவில்…

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படமான தசரா படத்திலிருந்து படு ரகளையான நடனத்துடன் கூடிய அசத்தலான பாடல் தசரா அன்று வெளியிடப்படவுள்ளது. சந்தோஷ் நாராயண் இசையமைப்பில் தூம் தாம் தோஸ்தான் பாடல், நிலக்கரிச் சுரங்கங்களில் நானி நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் அற்புதமான நடனத்துடன் கூடிய பாடலாக இருக்கும்.

பாடலிலிருந்து ஒரு அழகான போஸ்டர் தற்போது வெளியாகவுள்ளது. முரட்டுத்தனமிகுந்த அதிரடியான கிராமத்து லுக்கில், நானி அசத்தலாக இருக்கிறார். மிரட்டலான தோற்றம் அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அழுக்கு லுங்கி, கலைந்த தலை முரட்டு தாடி திறந்த சட்டை உள்ளே பனியனுடன் மிரட்டலான புன்னகையுடன் மிளிர்கிறார் நானி.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குநராக அறிமுகமாகிறார் இப்படத்தில் நானியின் காதலியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Exit mobile version