ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘சிந்துபாத்’ படங்களை தயாரித்து இயக்கிய T.M.ஜெயமுருகன், தனது மனிதன் சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் அடுத்து கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, தயாரித்து இயக்கி வரும் படம் ‘தீ இவன் ’ நவரச நாயகன் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன் J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். “மேலே ஆகாயம் கீழே பாதாளம்…” எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரும் வெளியிட்டனர்.
இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான டி.எம். ஜெயமுருகன் பேசியதாவது:-
ரஜினி, கமலுக்கு நிகராக நவரச நாயகன் கார்த்திக்கும் பெரிய நடிகர். அவரது முழு பரிமானத்தையும் ‘தீ இவன்’ படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன். நமது தமிழ்ச்சமூகம் கலை, கலாச்சாரம், உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளே நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கிறார்கள். பின்பற்றவும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் இன்று சீரழிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற போக்கு வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்ற கருத்தோடு, படத்தை எடுத்துள்ளேன். இதில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது, “தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள இப்படத்தில் நான் இடம்பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றும் மேலும் இந்தப் படத்தின் ஹீரோ நவரச நாயகன் கார்த்திகை பற்றி சொன்னவுடன் உடனே ஒத்துக்கொண்டார். இது அவர் தமிழ் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தை காட்டுகிறது. இப்படத்தின் பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்காக அவர் ஒத்துக்கொண்டது அவரது நல்ல மனசை காட்டியது.
இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தப் பிறகு என்னமாதிரியெல்லாம் சேட்டை பண்ணுகிறார்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு கந்தலாகி போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படியொரு சூழ்நிலையில் ஹாலிவுட் நாயகியாக இருந்தும் எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னிலியோன் நடித்துக்கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.
அவர் அழகாக நடனமாடியுள்ள அந்தப் பாடலில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக்கொடுத்துள்ளார். நடன இயக்குனர் காதல் கந்தாஸ் அருமையான நடன அமைப்பை செய்துள்ளார். தீ இவன் படம் நல்ல பெயரை பெற்றுத்தரும் இந்த படமும், பாடலும் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோருக்குமே ‘தீ இவன்’ படம் நல்ல பெயரை பெற்றுத்தரும். இந்தப் பாடலும் படமும் அனைவரையும் கவரும்.” என்றார்
இயக்குனர் பேசிக்கொண்டிருக்கும்போது “எனது உயர்வுக்கு காரணம் எனக்கு தாயாக இருக்கும் என் மனைவிதான்” என கண்ணீர் விட்டு கலங்கியபோது அவரது அருகில் அமர்ந்திருந்த சன்னிலியோன் இயக்குனரின் தோளை தட்டிக்கொடுத்து தேற்றினார். அதனைத்தொடர்ந்து சன்னி லியோன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது :-
“குறுகிய இடைவெளியில் மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வருவதற்கு முன்பு ஒருவித அயர்ச்சியில் இருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் பாடலுக்கு ஆடியபோது ரொம்ப கூலாகிட்டேன். டான்ஸ் மாஸ்டர் மிக அழகாக நடன அசைவுகளை அமைத்துக்கொடுத்ததால் ரொம்ப எளிதாகவும் நன்றாகவும் நடனமாட முடிந்தது. படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றியும் வாழ்த்தும். நான் எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால் திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் அது இந்த மொழிதான் என்று இல்லை. கலைக்கு மொழி இல்லை.
தமிழில் எந்த நடிகரை பிடிக்கும் ?என்று கேட்கிறீர்கள். இதுக்கு பதில் சொல்வது ரொம்ப கஷ்டம். சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு பிடித்த ஹீரோ நான் இந்த பாடல் காட்சியில் ஏன் நடித்தேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்துகொள்வீர்கள். தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள். இன்றைக்கு தேசிய பத்திரிகையாளர் தினம். நீங்கள் இல்லாமல் நாங்கள் மக்களை சென்று சேரமுடியாது. உங்க வேலை என்றைக்குமே நிற்காது. இந்த நாளில் பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்” என்றார். இறுதியில் ” தீ இவன் ” படத்தின் டீசரை சன்னிலியோன் வெளியிட்டார்