டாக்டர். G. தனஞ்ஜெயன் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஒரு பங்குதாரராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக பெற்றிருக்கிறார்.
G. தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers) USA -வில் முடித்துவிட்டு அங்கே தற்போது முன்னனி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு மகள்களது திருமணமும் இந்த வருடம் நவம்பர் – டிசம்பர் என ஒரு மாத இடைவெளியில் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
G. தனஞ்ஜெயன் அவரது மூத்த மகளான ரேவதியின் திருமணம் நவம்பர் 20, 2022 அன்று அபிஷேக் குமாருடன் அம்பத்தூரில் உள்ள PSB கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது. இதில் தமிழ் சினிமாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும் பிரபல பேச்சாளருமான சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார்.
இவ்விழாவில் தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள், முன்னணி இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் என திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது, ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பாடகர்கள் என பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். மொத்தத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கூடி திருமண நிகழ்வில் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை கூறினர்.
D’One அணியின் சுரேஷ் சந்திரா மற்றும் நாசர் தலைமையில் பிரபலங்கள் இந்த நிகழ்வுக்காக ஒருங்கிணைந்து கலந்து கொண்டனர்.