ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு “ரத்த சாட்சி”. இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதை கலங்க செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஆஹா தமிழ் ‘ ஓடிடி தளத்தில் 9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் ஜாவத் ரியாஸ் கூறியதாவது., இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியது. இந்த படத்தை மெருகேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருந்தது. ஆனால் அது எங்களை எந்த வகையிலும் சோர்வாக்கவில்லை. இந்தப் படத்தில் ஒரு ஆன்மா இருக்கிறது. கதையிலும் இந்த ஆன்மா இருக்கிறது, அது படத்திலும் வந்து இருக்கிறது , அதற்கு தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தான் காரணம். படத்தில் 6 பாடல்கள் இருக்கிறது. அது படத்துடன் ஒன்றி போய் இருக்கிறது. அதற்கு சிறப்பான வரிகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.
எடிட்டர் பிரகாஷ் கருணாநிதி கூறியதாவது.., இந்த கதையில் ஒரு மனிதநேயம் பேசப்பட்டு இருக்கிறது. ஜெயமோகன் சார் போன்ற சிறந்த எழுத்தாளருடைய கதையை சிறப்பாக படமாக்கி இருக்கிறோம். அதற்கு பொருத்தமான நடிகர்கள் இந்த படத்திற்குள் வந்துள்ளனர். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் கதையை மேம்படுத்தி உள்ளனர். நடிகர் கண்ணா ரவிக்கு இந்த படம் திருப்பு முனையாக இருக்கும். இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ஹரிஷ் கூறியதாவது.., இந்த படக்குழு என்னை அரவணைத்து கொண்டார்கள். இது போன்ற குழுவுடன் பயணித்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இயக்குனர் ரஃபிக் அவர்கள் கதையை காட்சியாக கடத்தும் விதம் என்னை பிரமிக்க வைத்தது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஆறுபாலா கூறியதாவது..,
கதையின் சிந்தாந்தத்தை அதன் சாராம்சம் குறையாமல் இயக்குனர் படமாக்கி இருக்கிறார். படபிடிப்பு முழுவதும் மிகுந்த அர்பணிப்போடு இருந்தார். கண்ணா ரவி உடைய கடின உழைப்பு பிரமிக்க வைத்தது. இந்த படத்தை தொழில்நுட்ப கலைஞர்கள் அற்புதமாக மேம்படுத்தி உள்ளனர். படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.
நடிகர் கண்ணா ரவி கூறியதாவது..
இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயமோகன் சாரின் இந்தக்கதை அட்டகாசமானது. அதை இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படத்தை எடுக்க ஒப்புகொண்ட அல்லு அரவிந்த் சாருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும்
இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் கூறியதாவது., ஜெயமோகன் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் உடைய பணி இந்த கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் உடைய பங்கு கதையின் போக்குடன் ஒத்து போயுள்ளது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
‘ஆஹா தமிழ் ‘ ஓடிடி தளத்தில் இப்படத்தை 9 டிசம்பர் 2022 முதல் கண்டுகளிக்கலாம்.