RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள விமரிசையாக நடைபெற்றது .
இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப்படத்தில் அவர் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். என்றார்.
நடிகர் டேனியல் பேசியதாவது…
காலேஜ் படிக்கும் போது எங்க ஏரியாவில் நடிகர் பரத் ஜிம்முக்கு போகும் போது பார்த்திருக்கிறேன். இப்போது அவரோடு நடித்தது மகிழ்ச்சி. நடிகை வாணியுடன் இன்னொரு படமும் நடித்துக் கொண்டிருக்கிறேன். மிக நல்ல நடிகை. இந்தப்படம் மிக திரில்லிங்கான கதை, நிறைய டிவிஸ்ட் இருக்கிறது. இயக்குநர் R.P.பாலா சூப்பரான ஆக்டர் அவரை நடிகராக பார்க்க ஆசை. இந்தப்படம் என்னோட கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் எல்லோருக்கும் என்றார். நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..
பரத் வாணி போஜன் வெற்றிக்கூட்டணியில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தின் கதையில் நிறைய ஆச்சர்ய திருப்பங்கள் இருக்கிறது. உங்களை மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும் என்றார்.
நடிகை வாணி போஜன் பேசியதாவது…
முதலில் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா ? என யோசித்தேன் ஆனால் இந்தக்கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப்படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் பரத் பேசியதாவது… இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப்படக்குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். RP Films R.P.பாலா தயாரிப்பாளராக மாறிவிட்டார். மிக நல்ல இயக்குநர். அவருடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. R.P.பாலாவுக்கு நன்றி. P G முத்தையா ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார். வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும் என்றார்.
இயக்குநர் தயாரிப்பாளர் R.P.பாலா பேசியதாவது.., பரத்திடம் பல கதைகள் சொல்லி கடைசியில் இந்தக்கதை ஓகே ஆனது. P G முத்தையா சொல்லித்தான் இந்தப்படம் நடந்தது. அவர் என் நெருங்கிய நண்பர். என்னை விட அவர் தான் இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்துள்ளார். விவேக்கை கண்டிப்பாக இப்படத்தில் கொண்டு வந்து விடுங்கள் என்று பரத் சொன்னார். விவேக் சூப்பராக நடித்துள்ளார். டேனியல் என் நண்பர். பரத், வாணி போஜன் இருவரும் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் அடுத்து எடுக்கும் படத்திற்கும் பரத் தான் ஹீரோ என்றார்.