சினிமா பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு, நடிகர் விமல்,பாலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் இயக்குனர் பேரரசு பேசுகையில்… நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய படங்களையும், இருவருக்குமான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.மிஷ்கின் எதார்த்தமாக படங்களை எடுத்து வருவதாகவும், அவர் பதார்த்தமான படங்களை எடுப்பதாகவும் எதுகை மோனையோடு பேசியதோடு, விஜய் நடித்த சிவகாசி வெளியான தீபாவளியன்று அனுபவித்த மகிழ்ச்சியை இப்போது இந்த விழாவில் கலந்து கொண்டதால் அனுபவிக்கிறேன் என்று பேசினார்.

இயக்குனர் மிஷ்கின் பேசுகையில்…சினிமாக்காரர்களுக்கும் பத்திகையாளர்களுக்கும் இருக்கும் உறவு கனவன் மனைவி உறவு போன்றது.அவ்வப்போது அடித்துக் கொள்வதும் அனைத்துக் கொள்வதும் வாடிக்கையான ஒன்றுதான்.ஆனால் பத்திரிகையாளர்கள் இல்லாமல் சினிமாக்காரர்கள் இல்லை என்றார்.அதோடு ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறியதோடு , விஷாலுக்கும் தனக்கும் இடையிலான சன்டைக்கு காரணமே இருவருக்கும் இடையிலான அதிகப்படியான அன்புதான்.அதனால் தான் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டோம் என்றதோடு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு இரண்டு லட்சம் தருவதாக கூறி உடனே காசோலை வழங்கினார்.

இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையிமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது எனக்கு பத்திரிகையாளர்கள் நண்பர்கள்.இரவு நேரங்களில் கணவன் மனைவி இருவரும் எப்படி சண்டையிட்டுக் கொண்டு காலையில் நீ என்ன பேசினாய் ? நான் என்ன பேசினேன் என்று தெரியாதோ அந்தளவிற்கு சண்டையிட்டுக் கொள்வோம்.அதே அளவுக்கு கட்டி அனைத்தும் நட்பு பாராட்டுவோம்.அப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் விழாவில் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைவி கவிதா என்னை அழைத்த போது எல்லோரும் உதவியிருக்கிறார்கள் நான் ஏதும் செய்ய வில்லையே என்றேன்.அதற்கு அவர் நீங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தாலே போதும் என்றார்.

இருந்தாலும் என்னால் முடிந்த சிறு தொகையை இந்த மேடையிலேயே வழங்குகிறேன் என்று கூறி ஐம்பதாயிரம் ரூபாயை சங்கத்தின் தலைவி கவிதா, செயலாளர் ஆபிரகாம் லிங்கன் ஆகிய இருவரிடமும் வழங்கினார்.அதோடு நீண்ட காலமாக பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையிலான நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் நடிகர்கள் விமல்,பாலா ஆகியோர் பேசினர்.சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பட்டாசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.( விரிவான செய்தி நாற்காலி செய்தி இதழில் )

Exit mobile version