தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத பல்வேறு காவியங்களை படைத்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கே.பி.ரசிகர் மன்றத் தலைவர் கலைமாமணி நடிகர் ராஜேஷ் உத்தரவின்பேரில் புஷ்பா கந்தசாமி மேற்பார்வையில் சங்கத்தின் செயலாளர் கவிதாலயா பாபு ஏற்பாட்டில் சென்னையில் பல இடங்களில் கே.பாலச்சந்தரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பிறகு பொதுமக்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடிகை சச்சு, கதாசிரியர் காத்தாடி ராமமூர்த்தி,நடிகை அஞ்சு,நடன இயக்குனர் கிரிஜா ரகுராம் மற்றும் நடிகர், நடிகைகள், ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.