பெப்சியில் இணைந்திருக்கும் 24 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் கிடைக்கிறதே என்ற ஆசையில் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெப்சியில் பணத்தைக் கட்டியிருந்தனர்.
இது சம்பந்தமாக தீவிரமாக விசாரணை செய்த போது பெப்சி நிர்வாகம் கூறிய கம்பெனி இன்னும் இடமே வாங்கவில்லை. இனிமேல் தான் தென்மாவட்டங்களில் இடம் வாங்க இருக்கிறார்கள். உறுப்பினர்களிடம் தலா 5000,7000, என செல்வமணி தலைமையிலான பெப்சி நிர்வாகிகள் 5 ஆயிரம் பேரிடம் 3 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறார்கள். அந்த பணத்தை உடனடியாக பெப்சி தொழிலாளர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என நாற்காலி செய்தி மாதம் இருமுறை இதழில் செய்தி வெளிவந்தது.
இந்த செய்தியை பார்த்த உறுப்பினர்கள் பெப்சி நிர்வாகிகளிடம் பணத்தை கேட்டு படையெடுத்தனர். உடனடியாக பெப்சி நிர்வாகிகளும் சிலருக்கு பணத்தை கொடுத்தனர். வசூல் செய்த பணத்தை சொந்தப் பயண்பாட்டிற்கு பயண்படுத்தியதால் மீதமுள்ள உறுப்பினர்களுக்கு உடனடியாக பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் தினறினர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி பைக் வழங்கப்படும் என ஏமாற்றினார் பெப்சி தலைவர் செல்வமணி.
செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு நாற்காலி செய்தி ஆசிரியரே தொழிலாளர்களுக்கு பைக் என்னாச்சு? என பிரசாத் லேபில் நடந்த விழாவில் கேட்டபோது இன்னும் சில நாட்களில் வழங்கி விடுகின்றோம் என பெப்சி யின் பொருளாளர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என உணர்ந்த செல்வமணி பைக் வழங்கும் திட்டத்தால் இனிமேல் ஏமாற்ற முடியாது. உடனடியாக பணம் செலுத்திய உறுப்பினர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து விடலாம் என முடிவெடுத்துள்ளார்.
தற்போது பெப்சி யின் நிர்வாகிகள் இணைக்கப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு எலக்ட்ரிக் பைக்கிற்கு கட்டிய பணத்தை பெப்சியில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என பேசியிருக்கிறார்கள்.
மூன்று கோடி பணத்தை வசூலித்து வருடக்கணக்கில் பயண்படுத்திய பெப்சி நிர்வாகம், நெருக்கடி ஏற்பட்டதும் அப்பாவி தொழிலாளர்களிடம் வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்கள்.
பைக் வழங்கும் திட்டம் ஒரு ஏமாற்று வேலை , இல்லாத கம்பெனி மூலம் எப்படி செல்வமணி பைக் வழங்குவார் என கேள்வி எழுப்பி அப்போதே செய்தி வெளியிட்டது நாற்காலி செய்தி இதழ்.
இனிமேலாவது தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாமல், தங்களை நம்பி வாக்களித்த உறுப்பினர்களின் நலனுக்காக நேர்மையாக உழைப்பார்களா ? பெப்சி நிர்வாகிகள்….