பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
எஃப்.ஐ.ஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். மிகப்பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.
மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக S. லஷ்மன்குமார் தயாரிக்கிறார். படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.