சமந்தா நடிக்கும் “சாகுந்தலம்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!

சமந்தா நடிக்கும் “சாகுந்தலம்” திரைப்படம் மிகப்பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது. பல மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது.

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சாகுந்தலம் படத்தில் சமந்தாவின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். பறவைகள் மற்றும் விலங்குகளால் சூழப்பட்ட காட்டில் அமர்ந்திருக்கிறார் சமந்தா.

சாகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார், மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர் V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். பிரபல நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா அறிமுகம் ஆகும் இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Gunaa DRP – Teamworks சார்பில் நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, சாகுந்தலம் படத்தை வழங்குகிறார். குணசேகர் இப்படத்திற்காக தனித்த முயற்சியில் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார்.

Exit mobile version