பி.என்.பி கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இந்தியன் புரடடடொக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண், வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியதாவது… ஒரு முக்கியமான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காமெடி மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு தாய், தந்தையர் எவ்வளவோ சொல்லியும் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
அப்படி தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஒரு இளைஞனின் கதை இது. இன்றைய இளைய தலை முறையினருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும். படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, ஒசூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்கிறார் இயக்குனர் சலங்கை துரை.