உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா

பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் வாழக்கை வரலாறு படமாக உருவாகிறது தேசிய தலைவர். இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா. இவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படிப்பை முடித்து மெரிட் மாணவியாக தேர்ச்சி பெற்றார். பாஷினி பாத்திமாவுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இவர் 2020ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அடுத்து உலக அழகி அதாவது மிஸ் வேர்ல்டு போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி பாஷினி பாத்திமா கூறியதாவது:
படிப்பில் ஆர்வம் உள்ளதுபோல் எனக்கு நடிப்பிலும் ஆர்வம் உண்டு. சிறந்த நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை சிறுவயதிலி ருந்தே உண்டு. உலக அழகியாக ஐஸ்வர்யாராய் பட்டம் வென்றபோது அவரைப் போல் நாமும் சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணம் என் லட்சிய மாக மாறியது. அதற்காக என்னை தயார் படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். என் தந்தையிடம் இதுபற்றி கூறியபோது அவர் என்னை வாழ்த்தியதுடன் கடினமாக உழைத்தால் உன் லட்சியத்தில் வெற்றிபெறுவாய் என்று ஆசியும் கூறினார். அது எனக்கு உற்சாகம் அளித்தது.


ஐஸ்வர்யா ராய் உலக அழகி போட்டியில் பங்கு பெற்ற மும்பையில் உள்ள மிஸ் வேர்ல்ட் ஆர்கனை ஷேனில் ( Miss World organization ) தான் நானும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்றேன். 2020 ஆண்டில் டெல்லியில் நடந்த போட்டியில் பங்கு பெற்று மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றேன். அடுத்து மிஸ் வேர்ல்ட் ( miss world ) போட்டிக்கும் அதே அமைப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். அலிஷர்மா பயிற்சி அளிக்கிறார்.

வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் மிஸ்
வேர்ல்டு போட்டியில் பங்கேற்க உள்ளேன்.
சினிமாவில் சிறந்த நடிகையாக வரவேண் டும் என்ற ஆசை உள்ளது. தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன். நான் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படித்து மெரிட் ஸ்டுடன்டாக தேர்ச்சி பெற்றேன். இவ்வாறு பாஷினி பாத்திமா கூறினார்.

Exit mobile version