தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து முக்கியப் படங்களில் நடிப்பதன் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார், நாயகி தேவியானி சர்மா. டெல்லியைச் சேர்ந்த தேவியானி சர்மா, தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திர பானுமதி ராமகிருஷ்ணாவுடன் அறிமுகமானார். படிப்படியாக பல பாத்திரங்களில் தலை காட்டியவர், ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் ஆகிய ஹிட் ஷோக்களில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இளம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவரும் தேவியானி சர்மா அடுத்ததாக முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடிக்கவிருக்கிறார்.
தேவியானி ஷர்மா ஒரு மேடை நாடக கலைஞர் மற்றும் ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திரா அகாடமியில் பாரம்பரிய நடனத்தை கற்றுத் தேர்ந்தவர். திரைத்துறைக்கு தேவையான தகுதிகள், அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார்.
‘திரைத்துறையில் கமர்ஷியல் நாயகியாக அல்லாமல், வலுவான கதாப்பாத்திரங்கள் மற்றும் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடுவதே என் கனவு’ என்கிறார். விரைவில் தமிழ் திரையுலகிலும் தலைகாட்டவுள்ளார். தமிழ் சினிமா பற்றி கூறுகையில்.. நான் தமிழ் சினிமாவை மிகவும் ரசித்து பார்ப்பேன் கலையும் கமர்ஷியலும் சரியான விகிதத்தில் இங்கு கலந்துள்ளது. எனக்கு தமிழ் சினிமாவில் எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தில் பணியாற்ற வேண்டும் என்றார்.