“விஜய்” தொலைக்காட்சியை கைப்பற்றிய “ஜியோ” நிறுவனம்

தமிழில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சிகளில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. வெறும் “விஜய்” தொலைக்காட்சியாக இருந்த இந்நிறுவனம், ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் “ஸ்டார் விஜய்” ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் வாங்கியது.

விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம்,
ஹாட்ஸ்டார் தளத்தை வைத்துக் கொண்டு விஜய்தொலைக்காட்சியை மட்டும் விற்பனை செய்திருக்கிறார்கள். டிஸ்னி நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவை அறிவித்ததும் அதை வாங்க மூன்று முன்னணி நிறுவனங்கள் முயற்சித்துள்ளன.

அவற்றில் முதலில் இருந்தது ஜியோ நிறுவனம். அந்நிறுவனம் இந்திய ஒன்றியமெங்கும் ஓடிடி தளத்தை நிறுவும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
தொடக்கத்தில் ஜியோ நிறுவனம், நீ பாதி நான் பாதி என்று பகிர்ந்து விஜய் தொலைக்காட்சியை நடத்தலாம் என்று டிஸ்னி நிறுவனத்திடம் பேசத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஜியோ நிறுவனத்தினர், எதிர்பாராத வண்ணம் மேலும் இரண்டு நிறுவனங்கள் போட்டிக்கு வந்துவிட்டதால் மொத்தமாக வாங்கும் முயற்சியை மேற்கொண்டுது.

அடுத்ததாக இந்தியஒன்றியத்தின் புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டாடா நிறுவனமும் இந்தத் துறையில் இறங்க முடிவெடுத்து விஜய் தொலைக்காட்சியை வாங்க முன்வந்துள்ளது. இவற்றோடு சோனி நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியை வாங்க முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இவை மட்டுமின்றி சன் தொலைக்காட்சி நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியை வாங்க முயற்சித்துள்ளது.

நான்கு நிறுவனங்களில் இப்போது, ஜியோ நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை வாங்கிவிட்டதாம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து ஒப்பந்தம் எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். விஜய் தொலைக்காட்சியின் விலை சுமார் 3 பில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, கலர்ஸ் தொலைக்காட்சியை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம் இப்போது விஜய்யையும் கைப்பற்றியிள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version