இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிய நிலையில், கடந்த காலங்களில் தனது வெற்றிக்கு தன்னோடு பயணித்த தொழில்நுட்ப கலைஞர்களை நினைவு கூர்ந்து தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பத்திரிகையாளர்களிடம் மகிழ்சியாக பகிர்ந்து கொண்டார்.
இந்த விழாவில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் ஆப்ரஹாம் லிங்கன் ஆகியோர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த விழாவில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.