பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்!
நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார்.ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப் படுத்தினார்.
அதோடு, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார் ஜெய். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் விதமாக பெண்கள் தினத்தில் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய்.
திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப் புடவைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஜெய். அதிலும், அந்த பட்டுப் புடவைகளை தனது தந்தை சம்பத், சகோதரி சந்தியா அவர்களை அனுப்பி ஒவ்வொரு பெண் செய்தியாளர்களிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜெய் இப்போது சுந்தர்.சி இயக்கி வரும் படத்திற்காக ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கிறார்.
இந்த பட்டுப்புடவை வழங்கியது பற்றி ஜெய்யிடம் கேட்ட போது, “நம் குடும்பத்து சகோதரிகளில் ஒருவராக பார்க்கிறேன்.நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர்.அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன்.அதனால் அவர்களுக்கு என் அன்பை, நன்றியை சொல்லும் வகையில் பட்டுப் புடவைகளை வழங்கினேன்.” என்றார்.