எஸ்.ஆர். பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.
ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.