பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், “உரியடி” விஜயகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “ஃபைட் கிளப்”, இப்படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் தற்போதுவரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் ஃபைட் கிளப் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ஐந்து கோடியே இருபத்தைந்து லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெரிய நடிகர்களின் படங்களுக்கே வரவேற்பு குறைந்துள்ள நிலையில், ஃபைட் கிளப் திரைப்படம் இந்த அளவுக்கு வசூல் சாதனை படைத்துள்ளதால், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.