ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக தயாரிக்கும் படம் “ஜெய் விஜயம்”, இப்படத்தை ஜெய்தீஸன் நாகேஸ்வரன் (ஜெய் ஆகாஷ் ) இயக்கி உள்ளார். இதில் அக்ஷயா கண்டமுத்தன் (விஜய் டி வி ஆஹா கல்யாணம் சீரியல் ஹீரோயின்) கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா. சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சதீஷ் குமார். சன் டி வி, விஜய் டி வியில் பல முறை சேம்பியனாக கலக்கிய மைக்கேல் அகஸ்டின், ஜெய் ஆகாஷ், கே. ராஜன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் ஹீரோ ஜெய் ஆகாஷ் பேசியதாவது… இப்படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்த எல்லோருமே பாராட்டினார்கள். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தின் எடிட்டர் ஏ.சி.மணிகண்டன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் பால்பாண்டி இடைவிடாமல் ஷூட்டிங் நடந்தபோது முகம் சுழிக்காமல் பணி யாற்றினார். ஜெய் விஜயம் என்று படத்துக்கு டைட்டிலை வைத்ததற்கு காரணம் என் பெயர் ஜெய், விஜயம் என்றால் வெற்றி. இதற்கு முன்பு “அமைச்சர் ரிட்டர்ன்” என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படம் செய்தேன். எவ்வளவு செலவு செய்தாலும் கதைதான் மிக முக்கியம். இதற்கு முன்பு நிறைய படம் நடித்தி ருக்கிறேன். அதில் நிறைய தெரிந்த முகங்கள் நடித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த படங்கள் மக்களிடம் போய் சேரவில்லை. எனவே நல்ல கதைகள் தேர்வு செய்யச் சொன்னார்கள். ஆனால் நல்ல கதை கிடைக்க வில்லை. எதுவுமே வித்தியாசமாக இல்லை.
சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா என்றால் பைத்தியம். தமிழில் எல்லா படத்தையும் நான் பார்த்து விடுவேன். எந்த படத்தை கேட்டாலும் யார் ஹீரோ என்று சொல்லி விடுவேன். தெலுங்கு, இந்தி மலையாளம், இங்கிலீஷ் என பிற மொழி படங்களையும் பார்த்து விடுவேன்.
என் கேரக்டர் எப்படின்னா, யாராவது கஷ்டப்படுவதாக சொன்னால் அவங்க கிட்ட என்கிட்ட இருக்கிற எல்லா பணத்தையும் கொடுத்து விடுவேன். ஆனால் யாராவது ஒரு பைசா ஏமாற்றினாலும் எனக்கு பிடிக்காது.
பணத்தை வேஸ்ட் பண்ணவும் பிடிக்காது. நான் எனக்கு செலவு செய்ய மாட்டேன், மற்றவர்களுக்கு கொடுப்பேன்.
ஜெய் விஜயம் நான் முதன்முறையாக தயாரிக்கும் படம். அதனால்தான் ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் என்று போட்டிருக்கிறேன். நான் நடித்த படங்களிலேயே குறைந்த பட்ஜெட்டில் தயாரித்த படம் இது. ஆனா நான் அதிகமாக பணம் கொடுத்தது இந்த படத்தோட மூலக் கதைக்குத்தான். இதில் நடித்த எல்லோருக்குமே நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள்.யாருமே சம்பளம் வாங்காமல் இதில் நடித்தார்கள். ஹீரோயின் அக்ஷயா கண்டமுத்தன் (Akshaya kandamuthan) கூட சம்பளம் வாங்கவில்லை. டிவியில் பிரபலமாக நடித்து வரும் இவரை நான் தான் என்னுடைய அமைச்சர் ரிட்டர்ன் படத்தில் அறிமுகப்படுத்தினேன். அந்த படத்துக்கு சம்பளம் கொடுத்தேன். ஆனால் கதை பிடித்திருந்ததால் ஜெய் விஜயம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார்.
ஒரு ஆங்கில படத்திலிருந்து இந்த கதையை எடுத்தேன். அதற்காக நிறைய விலை கொடுத்துவிட்டேன். அது என்ன கதை என்பதை இப்போது சொல்ல மாட்டேன். படம் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மலையாள படம் எப்படி எடுப்பார்களோ அப்படி எடுத்திருக்கிறேன். கதைக்கு அடுத்தபடியாக அதிகம் செலவழித்தது இதில் வரும் ஒரு ஆத்மா காட்சிக்குதான். இந்த ஆத்மாவை ஒரு புகை வடிவில் காட்டியிருக் கிறோம். அந்த புகை குழந்தையை காப்பாற்ற ஹீரோவுக்கு புகை வழிகாட்டும். இதில் இன்னொரு பெரிய சஸ்பென்ஸ் இருக்கிறது படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது. அதன் பிறகு ஏ கியூப் ஆப்-ல் (A Cube App) வெளியாகிறது. இதில் பார்க்க 50 ரூபாய் மட்டும்தான். உலகத்தில் எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் இந்த படத்தை டவுன் லோட் செய்து பார்க்கலாம். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன் பேசியதாவது… ஜெய் ஆகாஷ் நடித்த ராமகிருஷ்ணா என்ற படம் பார்த்தேன். அதில் அவர் எவ்வளவு அழகு. அதில் பிரமாதமாக நடித்திருந்தார். அந்த படம் ரிலீஸ் செய்வதில் பிரச்னை ஏற்பட்டபோது ஜெய் ஆகாஷ் அந்த படம் வெளியாக உதவினார். இதேபோல் சரத்குமாரும் தயாரிப்பாளருக்கு உதவுபவர். சினிமாவில் நிறைய சர்ச்சைகள் ஓட்டிக் கொண்டிருக்கிறது. அமீர், கார்த்தியின் பருத்தி வீரன் பட பிரச்னை இன்னும் நடக்கிறது. இதில் சிவகுமார் தலையிட்டு தீர்க்க வேண்டும். இந்த மேடையில்
ஜெய் ஆகாஷ் தனது ரசிகர்களை அழைத்து அழகு பார்த்திருக்கிறார். அதுபோன்றே அஜீத் போன்ற ஹீரோக்களும் ரசிகர்களை மதிக்க வேண்டும். அனைத்து ரசிகர்களையும் சந்திக்க வேண்டும். மன்சூர் அலிகான், த்ரிஷாவுக்கு சமீபத்தில் பிரச்னை ஆனது. மன்சூர் மன்னிப்பு கேட்டார். அதை ஏற்று திரிஷாவும் விட்டு விட்டார். தற்போது திரிஷா மீது வழக்கு போட்டிருக்கிறார். இதை விட்டுவிட்டு மன்சூர் தன் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். ஜெய் ஆகாஷ் ரொம்பவும் பாசிடிவான நடிகர். கண்டிப்பாக ஜெய் விஜயம் வெற்றிபெறும் என்றார்.
சாய் காயத்ரி பேசியது… ஜெய் விஜயம் பட ஆடியோ டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் வணக்கம். இப்படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ கியூப் மூவிஸ் ஆப் மூலம் உலகம் முழுவதும் பார்க்க உள்ளார்கள். ஏ கியூப் மூவிஸ் ஆப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல கதை உள்ள படங்களை இதில் வெளியிடுகிறார்கள். ஏ கியூப் மூவிஸ் ஆப் தளத்தில் திறமையானவர்கள் ஒரு நல்ல மேடை அமைத்து தேடுகிறார்கள். இந்த ஆப் இன்னும் பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.
நடிகர் காதல் சுகுமார் பேசியதாவது.. ஜெய் ஆகாஷ் எனது 15 வருட நண்பர். தெலுங்கில் அப்போது இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது எங்களுக்கு பழக்கம். அன்றுமுதல் நட்புடன் இருக்கிறோம்.
எனக்கு நிறைய ஃபேன்ஸ் கிளப் இருக்கு என்று ஜெய் ஆகாஷ் சொல்வார் அப்படியே ஒரு ஆர்டிஸ்ட் கிளப்பையும் அவர் உருவாக்கலாம். திரும்ப திரும்ப எங்களை மாதிரி ஆட்டிஸ்ட்களுக்கு வாய்ப்பு கிடைத்து கொண்டே இருக்கும். இதை நான் உண்மையில் சொல்கிறேன்.
பெரிய நடிகர் சின்ன நடிகர் என்பதெல்லாம் கிடையாது நடிகன் என்றால் நடிகன் அவ்வளவுதான். சினிமாவில் நான் பார்த்தவரை ரசிகர்களை மேடைக்கு அழைத்து அழகுபார்த்த ஒரே நடிகர் ஜெய் ஆகாஷ்தான். அதற்காக அவருக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன். ரசிகர்கள் இல்லை யென்றால் சத்தியாமாக திரையுலகம் இல்லை. சினிமாவை ஆப் (App) தளத்தில் வெளியிடலாம் என்று சொன்னபோது தான் தயாரிப்பாளர் சங்கத்திலேயே இப்படி ஒரு ஆப் தொடங்கி ரிலீஸ் செய்யலாமே என்றார்கள். ஆனால் அந்தளவுக்கு படங்கள் இல்லை, ஆப் (App) என்றால் தினம் ஒரு புது படமாவது வெளியிட வேண்டும் என்றார்கள். ஆனால் ஆப் (App) தளம் என்பது நல்ல விஷயம். சினிமாவை மட்டுமே நம்பி நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வாய்ப்பு தர வேண்டும்