நடிகர் அஜித்தின் 61-வது படமான அஜித் 61 படத்தின் பூஜை நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி நடந்ததாகவும், வரும் மார்ச் 19-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை ‘அஜித் 61’ படக்குழுவினர் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ளார். ‘அஜித் 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்திற்கு அனிருத் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும் என்றும், அடுத்த ஆண்டு இந்தப் படம் வெளியிடப்படும் என்றும் லைகா தெரிவித்துள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழிலநுட்ப குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் லைகா கூறியுள்ளது.