அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள்ளாகவே அதற்கு அடுத்து அவர் நடிக்கும் 62வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது அவர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் அஜித் நடிக்கும் 62வது படத்தை நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வரும் விக்னேஷ் சிவன் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருந்தார்.
அந்த பாடலுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்தில் நாங்க வேற மாதிரி எனும் பாடலையும் அம்மா சென்டிமென்ட் பாடலையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இதில் அம்மா சென்டிமென்ட் பாடலின் வரிகள் அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போகவே விக்னேஷ் சிவனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
விக்னேஷ் சிவனை பாராட்டிய கையோடு தனக்காக ஒரு கதையை தயாரிக்கும்படி அஜித் கேட்க தற்போது அதுவே அஜித் 62-வது படமாக உருவாகி வருகிறது. மேலும் வேதாளம் விவேகம் படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைய இருக்கிறார் என்ற செய்தியும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளது.
தற்சமயம் வினோத் இயக்கத்தில் 61வது படத்திற்கான வேலையில் பிஸியாக இருக்கும் அஜித் இந்த ஆண்டின் இறுதியில் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார்.