இன்றைய தினம் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க தேர்தல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும் மீண்டும் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையை தொடங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலை பெற்று உள்ளனர். மொத்தமுள்ள 29 பதவிகளில் அனைத்து பதவிகளுக்கும் விஷால் அணியினர் முன்னிலை பெற்ற நிலையில் பாக்கியராஜ் அணியினர் வெளிநடப்பு செய்தனர். பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் இருந்ததாக கூறி வெளிநடப்பு செய்தனர்.