தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 சதவிகிதம் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க தயாராகியுள்ளது. இந்த நிறுவனத்தின் துவக்க விழாவினை தமிழகத்தில் வரும் தமிழ்ப்புத்தாண்டு அன்று நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்தின் நிறுவனர்களான அல்லு அரவிந்த், ஜூபல்லி ராமு ராவ் ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தினை துவக்கி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர். தமிழில் ஆஹா ஓடிடி தளம் துவங்க முன் வந்த நிறுவனங்களை பாராட்டி மகழ்ந்திருக்கிறார்.
ஆஹா தமிழ் ஓடிடி தளம் வருகையால் கலைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.