தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் சமந்தா தற்போது ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் பயிற்சியில் “யசோதா” படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடித்து வருகிறார். இனிமேல் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட கதையை தேர்வு செய்து நடிக்க முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஹரி-ஹாரிஸ் இயக்கும்”யசோதா” படத்தில் ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் பயிற்சியில் ஆக்ஷன் காட்சிகளில் அற்புதமாக நடித்து அசத்தியுள்ளாராம் சமந்தா.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில்.. சமந்தா உள்ளிட்டோர் நடித்த ஆக்ஷன் காட்சிகளை 10 நாட்கள் படமாக்கியுள்ளோம். மூன்று விதமான அரங்குகளில் படமாக்கிய சண்டை காட்சிகளில், சமந்தா அசாத்தியமான ஆக்சன் காட்சிகளில் நடிக்க கடுமையாக உழைத்துள்ளார். தற்போது கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபகாலங்களில் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைப் போல் அல்லாமல் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் மிக அருமையாக வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மே மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.