நடிக்க வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர் பண மோசடி ! பிரபல நடிகருக்கு சிக்கல் !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எனக்கூறி நடிக்க வாய்ப்பு தருவதாக பணம் வசூல் செய்து ஏமாற்றியதாக விஜயலெக்ஷ்மி என்பவர் மீது சத்யா என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்கிற செய்தி அறிந்து விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜயலெக்ஷ்மி சத்யாவிற்கு கொடுக்கவேண்டிய பணத்தை வாங்கித் தருமாறு புகார் கொடுத்தால்… என்னிடம் நடிகரும் நடன கலைஞருமான லாரன்ஸ் நான்கு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார் என்கிறாராம் விஜயலெக்ஷ்மி. இவர் யார் ? இவர் எதற்காக லாரன்சிடம் பணம் கொடுத்தார் என கேட்டபோது.. இவர் இலங்கையைச் சேர்ந்தவர், இவரை நடிகையாக அறிமுகப்படுத்துகிறேன் என லாரன்ஸ் நான்கு கோடி பெற்றிருக்கிறார். பல மாதங்களாக லாரன்ஸ் இவரிடம் தொடர்பில் இருந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு லாரன்ஸ் செல்லும்போது இவரையும் காரில் அழைத்துச் சென்றதாகவும், நிகழ்ச்சியில் அவர் மட்டும் கலந்து கொள்வார். அவர் வரும் வரை காரில் இருக்குமாறு ஏசியை போட்டுவிட்டு சென்றிருக்கிறார் எனவும் விஜயலெக்ஷ்மி கூறுகிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் லாரன்ஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார். அதே நேரத்தில் காவல் நிலையத்தில் இரண்டு பெண்களும் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர் என்கிறார்கள்.

இரு தரப்பினரின் விளக்கங்கள் கிடைத்தும், முழு விபரமும் வரும் இதழில் விரிவாக காணலாம்.

Exit mobile version