“இங்கு மிருகங்கள் வாழும் இடம்” திரைவிமர்சனம்

பைன்ஜான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், பைன்ஜான் தயாரித்து நடித்துள்ள படம் “இங்கு மிருகங்கள் வாழும் இடம்”.

கதைப்படி… தந்தையின் அரவணைப்பில் ஶ்ரீ தேவி உன்னிகிருஷ்ணன் வளர்கிறாள். தந்தையும், மகளும் எளிமையாக சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவள் கல்லூரிக்குச் செல்லும் வழியில் ஒருவன் அவளை காதல் வயப்படுத்துகிறான். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என அவளிடம் ஆசை வார்த்தை கூறி அவளை ஏமாற்றி, தனது காரில் அழைத்துச் செல்கிறான். பின்னர் அவளை துன்புறுத்தி கற்பழித்ததோடு, நண்பர்களுக்கும் விருந்தளித்து சந்தோஷப்படுகிறான். போதையின் உச்சத்தில் அவளை கொலை செய்து, உடலை காட்டுப்பகுதியில் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.

பின்னர் காவல்துறையினர் மூலம் அவரது தந்தை ஜானுக்கு தகவல் தெரியவருகிறது. அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை..

சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில், கதைக்களம் அமைத்திருந்தாலும் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. புதுமுகங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள்.

மகளை சீரழித்த காமக்கொடூரர்களை பழி வாங்கும் தந்தை கதாப்பாத்திரத்தில் ஜான் நன்றாக நடித்திருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் ஓவர் தான்.

Exit mobile version