சப்தம்

“அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் ‘ஈரம்‘. தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அறிவழகன் – ஆதி கூட்டணி ‘சப்தம்‘ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை அறிவழகனே தயாரிக்கிறார்.

படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் படம் பற்றி இயக்குனர் அறிவழகன் கூறியதாவது : ‘ஈரம்‘ படம் முழுக்க மழை மற்றும் தண்ணீர் சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. தண்ணீரின் வழியாக பேய் வரும். அதே போன்று ‘சப்தம்‘ படத்தில் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சிகள் உருவாகியுள்ளன. முக்கியமாக, சப்தத்தை மையப்படுத்தி நிறைய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Exit mobile version