ராயன்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டரை தமிழ் புத்தாண்டையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.தொடர்ந்து படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் நின்றுகொண்டிருக்க, துஷாரா விஜயன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இதில் தனுஷின் கெட்டப் கவனிக்க வைக்கிறது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

Exit mobile version