GKR சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், DR.S. கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் “குற்றம் புதிது”. ரஜித் இயக்கத்தில், நாயகனாக தருண், நாயகியாக செஷ்வித்தா நடிக்கின்றனர். மேலும் மதுசூதன் ராவ், ராமச்சந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஶ்ரீநிதி, சங்கீதா, திணேஷ் செல்லையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் பி கிருபா இசையமைக்கிறார். ரஜித், கிரிஷ் பாடல்கள் எழுத, கமலக்கண்ணன் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் கூறுகையில்.. கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை எதார்த்தமாக பேசும் கதைக்களத்தில் “குற்றம் புதிது” உருவாக இருக்கிறது என்றார்.