“ஈடன் ஃபிளிக்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகிய இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் “வானவன்” படத்தின் படப்பிடிப்பும முடிந்த நிலையில், படக்குழு தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வானவன் படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில்.. இப்படத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர் ), ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டார் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது.
யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான “மாஸ்குரேட்” சீரிஸை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப் புறங்களைச் சுற்றி படம்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில், அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த “கார்கி” படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.