சர்ச்சையில் சிக்கிய கமலின் மகள்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிப்பில் சமீபத்தில் அமேசானில் வெளியான “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” பல விருதுகளைப் வென்றதாகச் சொல்லப்பட்டாலும், தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த படத்தில் ஒரு காட்சியில் அக்ஷரா ஆண் நண்பருடன் படுக்கையறையில் ஆணுறை கிடைக்காமல் அல்லாடும் காட்சியில், ஆணுறை கிடைத்ததும் கடவுளுக்கு நன்றி என அக்ஷரா ஹாசன் கத்தும் காட்சி தற்போது சர்சையாகியிருக்கிறது. கடவுள் நம்பிக்கையை அக்ஷரா களங்கப்படுத்திவிட்டார் என வெளியான சர்ச்சைக்குரல்கள் தற்போது படம் குறித்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version