தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வந்த டீரீம் வாரியார் நிறுவனம், குறைந்த பட்ஜெட்டில் அருவி, ஜோக்கர், பர்ஹானா போன்ற தரமான திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வியாபார முக்கியத்துவம் இல்லாத நடிகர் ஜீவா – பவானி சங்கர் இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் பிளாக் படத்தை தனது கிளை நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளது.
பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
அபாட்மெண்ட்டில் இருக்கும் ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்களை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ள திரைக்கதை பிளாக் என்பது தெரிகிறது.
ட்ரைலரில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான காட்சிகள் அதனை உணர்த்தும் வகையில் நகர்கின்றன.பதட்டத்துடன் பிரியா பாவானி சங்கர், அப்புறம் கலகலப்பான ஜாலி மூடு காட்சிகள்,திகிலூட்டும் காட்சிகள் பார்ப்பவர்களுக்குள் குறுகுறுப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. குடியிருக்க செல்லும் வீட்டில் நடக்கும் மர்மமான சம்பவங்களும், அதையொட்டிய நிகழ்வுகளும், சுவாரஸ்மாக இருக்கும் என தெரிகிறது.