‘கண்ணப்பா’வில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யா

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை ‘கண்ணப்பா’ என்ற பெயரில் தெலுங்கில் தயாராகிறது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை தெலுங்கு நடிகர் மோகன்பாவும், அவரது மகள் லட்சுமி மஞ்சுவும் இணைந்து தயாரிக்கிறார்கள். மகன் விஷ்ணு மஞ்சு கண்ணப்பராக நடிக்கிறார். இவருடன் சரத்குமார், மோகன்பாபு, மது, முகேஷ் ரிஷி, பரம்மானந்தம், பிரீத்தி முகுந்தன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மோகன்லால், பிரபாஸ், அக்ஷய்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பான் இந்தியா நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் தமிழ் நடிகையான ஐஸ்வர்யா முக்கிய கேரக்ட்ரில் நடிக்கிறார். பழம்பெரும் நடிகையான லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட பங்களில் நடித்துள்ளார், தமிழில் நாயகியாகவும், குணிசித்ர வேடங்களிலும 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் ஏராளமான டி.வி. தொடர்களில் நடித்தார். சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டாடா, யானை படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் ‘கண்ணப்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் காட்டில் வாழும் மாரியம்மா என்ற சூனியக்காரியாக நடித்திருக்கிறார். அவரது தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Exit mobile version