புஷ்பா-2 : 2000 கோடி ரூபாய் வசூல் செய்யுமா?

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2’ படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு வெளியானது. எதிர்பாராத அளவில் பெரிய வெற்றியைப் பெற்று ஹிந்தியிலும் சேர்த்து வசூல் சாதனை புரிந்தது. சுமார் 400 கோடி வரையில் அப்படம் வசூலித்தது. அதனால், இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

‘பாகுபலி 1’ வெளியாகி வசூலித்ததை விட ‘பாகுபலி 2’ வசூல் சாதனை புரிந்தது. அதுபோல ‘புஷ்பா 2’ படத்திற்கும் நடக்கும் என நம்புகிறார்கள். இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக ‘புஷ்பா 2’ இருக்க வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி யுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி, தொலைக்காட்சி, இசை உள்ளிட்ட உரிமைகள் முன்பாகவே விற்கப்பட்டு விட்டன. இதர மொழிகள் விநியோகஸ்தர்களை அறிமுகம் செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழி விநியோகஸ்தர்களையும் அறிமுகப்படுத்தியது படக்குழு.

அனைவருமே தங்களுடைய பேச்சில், கண்டிப்பாக பெரிய வசூல் செய்யும் அளவுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்கள். இந்திய அளவில் அதிக வசூல் செய்த படமாக ‘புஷ்பா 2’ இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு இருப்பது தெரிகிறது. ஏற்கனவே, ‘புஷ்பா’ படத்தின் இந்தி வசூலை பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். இப்போது ‘புஷ்பா 2’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு கண்டிப்பாக அதனை தாண்டும் என்று கருதுகிறது படக்குழு. ‘புஷ்பா 3’ குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் ரவி ஷங்கர், “’புஷ்பா’ 3-ம் பாகத்துக்கு ஒரு நல்ல முடிவுடன் 2-ம் பாகம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். ‘புஷ்பா 2’ படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தெலுங்கு திரையுலகில் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமை 225 கோடி, வட இந்திய உரிமை 200 கோடி, தமிழக உரிமை 50 கோடி, கர்நாடகா 30 கோடி, கேரளா 20 கோடி, வெளிநாடுகள் 120 கோடி என மொத்தமாக 645 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை மட்டும் 275 கோடி, இசை உரிமை 65 கோடி, சாட்டிலைட் டிவி உரிமை 85 கோடி என தியேட்டர் அல்லாத இந்த உரிமைகள் மூலம் மட்டுமே 425 கோடிக்கு வியாபரம் நடந்துள்ளதாம். இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். இந்த தியேட்டர் அல்லாத உரிமைகள் மூலம் மட்டுமே படத்திற்கான செலவுத் தொகை தயாரிப்பாளருக்கு நேரடியாகக் கிடைத்திருக்கும். தியேட்டர் வியாபாரம், அதன் பிறகான வசூல் அனைத்தும் படத்திற்குக் கிடைக்கப் போகும் லாபக் கணக்கில் சேரும்.

Exit mobile version