திரையரங்குகளுக்கு உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும்…டி.ராஜேந்தர்.

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் மத்திய அரசு 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் கூறுகையில்….

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது . நாங்கள் மட்டும் முழுமையான 12 சதவிகித வரியை ஏன் செலுத்த வேண்டும்? திரையரங்குகளில் 100சதவிகித இருக்கைகள் அனுமதிக்க கூடாது ஆனால் GST மட்டும் நூறு சதவிகிதம் நாங்கள் செலுத்த வேண்டும் என்பது நியாயமா ?

மக்கள் பொழுது போக்க சில ஊர்களில் மட்டுமே கடற்கரை இருக்கிறது. மற்ற ஊர்களில் மக்கள் சினிமா திரையரங்குகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சினிமாவுக்கு வரும் மக்கள் தான் வரி செலுத்துகிறார்கள் அவர்கள் மீது மீண்டும் வரிச்சுமையை விதிப்பது நியாயமா ? ஆகையால்

தமிழக அரசு விதிக்கும் உள்ளாட்சி வரி 8 சதவீதத்தை நீக்கி கலை உலகினரின் கவலையை போக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமிக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version