“கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘ஹாய்’ என தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. சிவபாலன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. நெல்சன் தயாரித்துள்ள இப்படத்தினை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடவுள்ளார். தீபாவளிக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது.
இப்படத்துக்குப் பிறகு ‘கிஸ்’, ‘மாஸ்க்’ மற்றும் நயன்தாராவுடன் ஒரு படம் என கவின் கவனம் செலுத்தி வருகிறார். இதில் கவின் – நயன்தாரா இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘ஹாய்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை லலித் குமார் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இப்படத்தினை இயக்கி வருகிறார். முழுக்க காதல் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. 2025-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘ஹாய்’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.