வெப் தொடராக ஆதிசங்கரரின் வாழ்க்கை

இந்து சமூகத்தின் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் பரப்பிய துறவியான ஆதி சங்கராச்சாரியரின் இளமை பருவகால வாழ்க்கை வெப் தொடராக தயாராகி வருகிறது. இதனை ஓங்கார் நாத் மிஸ்ரா இயக்குகிறார். அனவ் காஞ்சியோ ஸ்ரீசங்கர் ஆதி சங்கரராக நடிக்கிறார். குகன் மாலிக் அசோக மன்னராகவும், சந்தீப் மோகன் ஆச்சார்யா சிவகுருவாகவும், சுமன் குப்தா தேவி ஆரியம்பாவாகவும், நடிக்கிறார்கள். சூரிய கமல், பாபி பட்டாச்சார்யா இசை அமைக்கிறார்கள். இயக்குனர் ஓங்கார் நாத் மிஸ்ரா மற்றும் நகுல் தவான் இணைந்து தயாரிக்கிறார்கள். பெங்களூரு, மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தொடர் குறித்து இயக்குனர் ஓங்கார் நாத் மிஸ்ரா கூறும்போது “இந்தத் தொடர் ஆதி சங்கராச்சாரியாரின் ஆரம்பகால வாழ்க்கை, அவரது ஆன்மிகப் பயணம் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 72 மதக் குழுக்களாகப் பிரிந்திருந்த இந்தியாவை ஒருங்கிணைக்க அவர் எவ்வாறு உதவினார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.

ஒருமைப்பாடு பற்றிய அவரது போதனைகள் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதிலும் இந்தியாவின் ஆன்மிக மற்றும் அரசியல் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதிலும் அவருடைய பங்கு எத்தகையது என்பதை சொல்லும் விதமாக தயாராகி வருகிறது. 10 எபிசோட்களாக தயாராகி வரும் இந்த தொடர் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பல ஓடிடி தளத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். என்றார். “

Exit mobile version