‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் சாதனை

ராயன் படத்திற்கு பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் நடிகர் தனுஷ். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவர் தவிர அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்திலிருந்து ‘கோல்டன் ஸ்பாரோ’ எனும் முதல் பாடல் வெளியானது. அறிவு எழுதிய இப்பாடலை சுபலாஷ்னி, தனுஷ், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடினர். பாடல் வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்த இந்த பாடல் இப்போது யு-டியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து வலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது.

Exit mobile version