வசூல் சாதனை நிகழ்த்திய படத்தில் சாதனை படைத்த தமன்னா ஆடிய பாடல்

தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ், என முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற காவாலா ஒற்றை பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ஸ்த்ரீ 2 படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது இந்தி படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இப்படத்தை அமர் கவுசிக் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்த்ரீ 2 படத்தில் தான் நடனமாடிய வீடியோ பாடல் யூடியூப்பில் 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளை கடந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Exit mobile version