“ஓ மை டாக்” படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் ஒரு குழந்தைக்கும், நாய்க் குட்டிக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான அன்பை வெளிப்படுத்தும் பொழுதுபோக்கு திரைப்படமாக கதைக்களத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விஜயகுமார், அருண் விஜய், ஆர்ணவ் விஜய் என ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் அதாவது தந்தை, மகன், பேரன் என மூன்று பேரும் நடித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் முதன் முறையாக விஜயகுமாருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் நாய்க்குட்டிகளுன் மிகவும் நெருக்கமாக பழகி, அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகனின் திறமையைப் பார்த்து வியந்து பேசி வருகிறார் தந்தை அருண் விஜய். இந்தப் படம் குறித்து படக்குழுவினர் கூறும்போது கோடைக்கால விடுமுறையை குழந்தைகள் குதுகலத்துடன் ரசித்து மகிழும் வகையில் இந்த படம் இருக்கும் என்கிறார்கள்