தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டாயிரம் என்னும் படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு அந்த சங்கத்தின் உறுப்பினருக்கு தடையில்லா சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் 2K என்ற பெயரில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் அந்த சங்கத்தின் உறுப்பினருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
படத்தின் பெயர் பதிவு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட சங்கங்களில் குறிப்பிட்ட தலைப்புகள் இருக்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் படத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அவ்வாறு பதிவு செய்யப்பட்ட படத்தின் தலைப்புகள் சங்கத்தின் செயற்குழுவில் அனுமதி பெற்ற பிறகு தான் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 2K என்னும் பெயரில் தடையில்லா சான்றிதழ் வழங்கிவிட்டு நேற்று செயற்குழுவில் ஒப்புதழுக்கு வைத்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகி.
ஏற்கனவே இரண்டாயிரம் என்னும் பெயர் கில்டில் இருக்கும் போது, அந்த பெயரோடு தொடர்புடைய 2K என்ற பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எப்படி வழங்கினார் அந்த நிர்வாகி?
பணியாளர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்க தவறினால் சங்கத்தின் ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக வந்திருக்கும் நிர்வாகிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.