“ஸ்மைல் மேன்” படத்தின் திரைவிமர்சனம்

மேக்னம் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சரத்குமார், ஶ்ரீ குமார், சிஜா ரோஸ், இனியா உள்ளிட்டோர் நடிப்பில், ஷியாம் பிரவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஸ்மைல் மேன்”.

கதைப்படி… சிபிசிஐடி யில் உயர் பொறுப்பில் நேர்மையான அதிகாரியாக இருப்பவர் சிதம்பரம் நெடுமாறன் ( சரத்குமார் ). குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில், விபத்தில் சிக்கி சில வருடங்கள் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு ஞாபகமறதி ( அல்சைமர் ) நோய் பாதிப்பால் ஒரு வருடத்தில், பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போகும் என மருத்துவர் கூற, அன்றாட சம்பவங்களை பதிவு செய்து கொள்வதோடு. பழைய சம்பவங்களில் தனது அனுபவங்களை புத்தகமாகவும் வெளியிடுகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சீரியல் கொலைகள் ( ஸ்மைல் மேன் ) தற்போதும் நடைபெறுகிறது.

இந்த கொலை வழக்கு மீண்டும் சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியாக அரவிந்த் ( ஶ்ரீ குமார் ) நியமிக்கப்படுகிறார். இதுபோன்ற வழக்குகளை கையாண்ட மூத்த அதிகாரியின் அனுபவம் இருந்தால், வழக்கை விரைவாக முடிக்கலாம் என சரத்குமாரை மீண்டும் அழைத்து அவரது தலைமையில் ஒரு குழு விசாரணையைத் தொடங்குகிறது.

மீண்டும் பழைய பானியியிலேயே சீரியல் கொலைகள் செய்யும் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா ?இல்லையாயா ? என்பது மீதிக்கதை..

சரத்குமார் இதுபோன்ற கதாப்பாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இது அவரது 150 வது படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தளவுக்கு இந்தப் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

திரைக்கதையும் விறுவிறுப்பில்லாமல் நகர்வதால் பார்வையாளர்களை சோர்வடைய வைத்துள்ளார் இயக்குநர். மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

Exit mobile version