நடிப்பு எனக்கு சலிப்பை ஏற்படுத்தும் – இயக்குனர் செல்வராகவன்

’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன், ஒரு நடிகராக வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார்.


தான் நடிக்க வந்தது குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். . இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்பத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கற்பிப்பதாக இருந்தது என்றார்.

பெண் காவலராகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் தினக்கூலியாக பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை ’சாணி காயிதம்’ சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.
ஸ்கிரீன் சீன் மீடியா பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’சாணி காயிதம்’ மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படும். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது.

Exit mobile version