“தக் லைஃப்” விமர்சனம்

ராஜ் கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், கமல், அபிராமி, த்ரிஷா, சிம்பு, ஐஸ்வர்ய லெட்சுமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள், நாசர், வடிவுக்கரசி, வையாபுரி உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தக் லைஃப்”.

கதைப்படி.. டெல்லியில் சக்திவேல் ( கமல்ஹாசன் ) பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். அவரது அண்ணன் நாசர், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் சக்திவேலுக்கு துணையாக இருக்கிறார்கள். இவரை சுட்டுக்கொள்ள வில்லன் மஞ்ச் ரேக்கர், போலீஸ் துணையிடன் திட்டம் தீட்டி, போலீஸ் கமலை சுற்றி வளைக்க, எதிர் தாக்குதலில் பேப்பர் போட வந்தவர் குண்டு பாய்ந்து பழியாகிறார். அருகில் பேப்பர் போட்டுக்கொண்டிருந்த சிறுவன் சிம்பு கதறி அழுகிறான்.

பின்னர் அந்தப் பையனை கமல் வளர்க்கிறார். காலப்போக்கில் கமலும் தொழிலில் அபார வளர்ச்சி அடைகிறார். கமல் செய்யும் பல சம்பவங்களுக்கு சிம்புவம் துணையாக இருக்கிறார். இவர்களின் சாம்ராஜ்யத்தை அழிக்க எதிர் அணியினர் தீட்டும் திட்டத்தில், கமல் சிறை செல்ல நேரிடுகிறது. அப்போது கமலின் இடத்திற்கு வர நாசர் ஆசைப்படுகிறார். அவர் சிம்புவின் துணையோடு திட்டம் தீட்டுகிறார். இந்நிலையில் தன் மகன் போல் வளர்த்த சிம்புவும் கமலுக்கு எதிராக, கமலை பழிவாங்க நினைக்கிறார்.

பின்னர் நாசரின் திட்டம் நிறைவேறியதா ? சிம்பு கமலை பழிவாங்க தீட்டும் திட்டம் என்னானது ? என்பது மீதிக்கதை..

வழக்கமான கேங்ஸ்டர் கதைதான் என்றாலும், மணிரத்தினத்தின் மேக்கிங் பிரமிக்க வைக்கிறது. கமலின் அசாத்தியமான நடிப்பு, சிம்பு கூட்டனி, அபிராமி, த்ரிஷா கதாப்பாத்திரங்கள் சிறப்பு. இடையிடையே நிகழ்கால டெல்லி அரசியல் வசனங்கள் என மணிரத்னம் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

Exit mobile version