அனுகிரஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் காமாட்சி கனிமொழி தயாரிப்பில், பிரசாத் ராமன் இயக்கத்தில், “லவ் யூ பேபி” என்னும் ஆல்பம் பாடலை பாடியிருக்கிறார் ப்ரேம் ஜி.
இந்த பாடலில் நடிகர் சந்தோஸ் பிரகாஷ் நடித்துள்ளார். “கதை திரைக்கதை வசனம் இயக்கம்”, “பொது நலன் கருதி”, “என் பெயர் ஆனந்தன்”, “பஞ்சாஷரம்” ஆகிய படங்களில் நாயகனாகவும், சார்பட்டா பரம்பரையில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இளைஞர்களின் மனநிலையை உணர்ந்து, ட்ரெண்டாகும் வகையில் “டசக்கு டசக்கு”, “வா மச்சானே” ஆகிய பாடல்களை எழுதிய முத்தமிழ், பிரசாத் ராமன் ஆகிய இருவரும் இந்தப் பாடலை எழுதியிள்ளனர்.
இசையமைப்பாளர் ராகேஷ் அம்பிகாபதியின் தனது தனித்துவமான இசையில், சந்தோஷ் பாண்டியின் ஒளிப்பதிவில் வெற்றி பெறும் முகாந்திரங்களோடு உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ரிச்சர்ட் கிறிஸ்டோபர் நடனம் அமைத்துள்ளார்.
இன்றைய இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள “லவ் யூ பேபி” பாடலுக்கு ப்ரேம் ஜி பாடியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.